சட்டவரைஞர் திணைக்களத்தின் முக்கிய பணி, அரசாங்கத்தின் சட்டவாக்க நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதனை வசதிப்படுத்துவதற்கெனச் சட்டவாக்கங்களை வரைதலும் திருத்துதலும் துணைநிலைச் சட்டவாக்கங்களை வரைதலும் மீளாய்தலும் ஆகும். அமைச்சரவை முடிபுகளில் அடங்கியுள்ள அரசாங்கக் கொள்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும்வகையிலான அத்தகையவொரு முறையில் அரசாங்கத்தின் சட்டவாக்க நிகழ்ச்சித்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் அத்தகைய நடைமுறைப்படுத்துதலை வசதிப்படுத்துவதற்கென அவசியமான உள்நாட்டுச் சட்ட உட்கட்டமைப்பை வழங்குதல், சட்டவரைஞர் திணைக்களத்தின் முதனிலைக் கடமையாகும்.

சட்டவாக்கங்களை வரைதலென்ற பணியை நிறைவேற்றுவதில் திணைக்களமானது இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளினாலும், தாபனக் கோவையில் அடங்கியுள்ளவையும் அத்தகைய நோக்கத்துக்காக இயற்றப்பட்டுள்ளவையுமான நிருவாக ஒழுங்குவிதிகளினாலும் ஆளப்படுகின்றதுளூ இக்கோவை அமைச்சரவையின் பணிப்புகளின்கீழ் பொது நிருவாக அமைச்சினால் வழங்கப்படுகின்றது.

பாராளுமன்றம், சட்டங்களை ஆக்குவதற்கான தத்துவத்தைக் கொண்டிருத்தல் வேண்டுமென அரசியலமைப்பின் 75 ஆம் உறுப்புரை  கூறுகின்றது. பாராளுமன்றத்தின் சட்டமாக்கல் தத்துவத்தைப் பிரயோகிப்பதற்கு ஏற்புடையற்பாலதான நடவடிக்கைமுறையை 76 முதல் 80 வரையிலான உறுப்புரைகள் எடுத்துக்கூறுகின்றன. தாபனக் கோவை, அத்தியாயம் XXXIII 2:1 முதல் 2:3 வரை வரைவுச் சட்டமாக்கலைக் கையாளுகின்றதுடன், 'சட்டமாக்கலின் வரைவொன்றுக்கான கோரிக்கை, எல்லா விடயங்களிலும், வரைவைத் தயாரிப்பதில் சட்டவரைஞரின் உதவிக்காக இயன்றளவு மிக்க முழுமையான அறிவுறுத்தல்களைக்கொண்ட நிருபத்துடன் சேர்த்தனுப்பப்படுதல் வேண்டும்' எனவும் கூறுகின்றதுளூ அத்துடன் அரசாங்கத்தின் சட்டமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின்மீது அமைச்சரவைத் தீர்மானம் செய்யப்படுவதன்மேல், அத்தகைய முடிவு ஒவ்வொரு செயலாளருக்கும் சட்டவரைஞநருக்கும் அறிவிக்கப்படுதல் வேண்டும். துணைநிலைச் சட்டவாக்கம் தொடர்பாக, அத்தகைய 'துணைநிலைச் சட்டவாக்கம் அதற்காகக் கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சினால் அல்லது அதிகாரசபையினால் வரையப்படுதல் வேண்டுமென்றும், அதன்பின்னர் மீளாய்வுக்காகச் சட்டவரைஞருக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டுமென்றும், இணைப்பிரதியிலும் மும்மொழிகளிலும் இருத்தல் வேண்டுமென்றும்' கூறப்படுகின்றது.

வரைவுச் சட்டவாக்கங்களும் துணைநிலைச் சட்டவாக்கங்களும் தொடர்பிலான அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதற்கும் திணைக்களம் கோரப்படுகின்றதுடன், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு இசைந்தொழுக வரையப்பட்ட சட்டவாக்கங்களின் வெற்றிகரமான இயற்றுகைக்காகப் பாராளுமன்றத்துடன் அது ஒருங்கிணைதலும் வேண்டும்.

Scroll To Top