அரசாங்கத்தின் சட்டவாக்க நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதனை வசதிப்படுத்துவதற்கெனச் சட்டவரைஞர் திணைக்களம், முதன்மை மற்றும் திருத்தச் சட்டவாக்கங்களை வரைவதனையும் துணைநிலைச் சட்டவாக்கங்களை வரைவதனையும் பணியாகக் கொண்டுள்ளது. வரைவுச் சட்டவாக்கங்களும் துணைநிலைச் சட்டவாக்கங்களும் தொடர்பில் அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதற்கும் திணைக்களமானது கோரப்படுவதுடன், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு இசைந்தொழுக வரையப்பட்ட சட்டவாக்கங்களின் வெற்றிகரமான இயற்றுகைக்காகவும் பாராளுமன்றத்துடன் அது ஒருங்கிணைதலும் வேண்டும்.
இரு தேசிய மொழிகளிலும் இணைப்பு மொழியாகவுள்ள ஆங்கிலத்திலும் சட்டவாக்கங்களை இயற்றுவதற்கான அரசியலமைப்புச்சார் தேவைப்பாட்டின் நோக்கில், வினைத்திறனையும் செம்மையையும் உறுதிப்படுத்தும் அதேவேளையில், திணைக்களத்தின் வரைஞர்கள் இரண்டு அல்லது மூன்று பேரைக்கொண்ட குழுவினராக வழமையாகப் பணியாற்றுகின்றனர்.
ஒரு வரைவு தொடர்பான அறிவுறுத்தல்கள், குறித்தளிக்கப்பட்ட பணிக்கான பொறுப்பை ஏற்று, பணிக்காகக் குறித்தளிக்கப்பட்ட கனிட்ட அலுவலரின் உதவியுடன் அவ்விடயத்தைக் கவனிக்கின்ற ஒரு சிரேட்ட வரைஞருக்குக் குறித்தொதுக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் ஒரு முதனிலை வரைவு தயாரிக்கப்படுகின்றதுளூ இவ்வரைவு பற்றி முழுமையாகக் கலந்துரையாடப்பட்டு கொள்கை முடிபுக்கு இசைந்தொழுகும்வகையில் அது திருத்தப்படும்ளூ பின்னர் இயைபான அமைச்சுக்கு இறுதி வரைவொன்று அனுப்பிவைக்கப்படும்.
வரைவின் அரசியலமைப்புக்கிசைவாந்தன்மையைச் சட்டத்துறைத் தலைமையதிபதி சான்றுப்படுத்துவதற்கு அதேநேரத்தில் அவ்வரைவு அவருக்கு அனுப்பப்படுகின்றது. அதன்பின்னர் வரைவானது சட்டமூலமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படுகின்றது.




