டொனமோர் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பை எதிர்பார்த்து, 1927 ஆம் ஆண்டில் சட்டவரைஞர் பதவி உருவாக்கப்பட்டு 1927 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதத்தில் சட்டவரைஞராகக் கடமைகளையேற்ற திரு. ஆர்தர் டயர்-போல் அவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டவரைஞர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது ஆளாகவிருந்தார்.

சட்டவரைஞரின் பணிகள், புதிய சட்டமூலங்களையும் திருத்தச் சட்டவாக்கங்களையும் வரைதல், அத்தகைய சட்டமூலங்களுக்கான குறிக்கோள்களும் காரணங்களும் பற்றிய கூற்றுக்களைத் தயாரித்தல், எல்லாப் பிரகடனங்களையும், அறிவித்தல்களையும், அரசப்பேரவைக் கட்டளைகளையும், துணைவிதிகளையும், விதிகளையும், ஒழுங்குவிதிகளையும் தயாரித்தல், திணைக்களத் தலைவர்களுடனான நேர்காணல்களை நடாத்துதல் மற்றும் சட்டமூலங்கள் கலந்துரையாடப்படும்போது சட்டப்பேரவைக் கூட்டங்களுக்கும் பேரவையின் தெரிவுக்குழுக்களுக்கும் வருகை தருதல் என்பனவாக விவரிக்கப்பட்டன.

1931 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் தனிவேறான சட்டவரைஞர் திணைக்களமொன்று சட்டச் செயலாளரின்கீழ் உருவாக்கப்பட்டது. முதலாவது சட்டவரைஞரான திரு.டயர்- போல் அவர்கள் 1931 ஆம் ஆண்டில் இறந்தபின்னர், 1933 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம்வரை அப்பதவிக்கான நிரந்தரமான நியமனமெதுவும் செய்யப்பட்டதாகத் தோன்றவில்லை. இக்காலத்தின் போது ஓர் உதவிச் சட்டவரைஞராகவிருந்த திரு. சீ.சீ.ஏ. பிரிட்டா முத்துநாயகம் அவர்கள் சட்டவரைஞராகச் செயலாற்றுவதற்கு நியமிக்கப்பட்டார். சட்டத்துறைத் தலைமையதிபதியின் கூடத்திலிருந்து அத்தகைய நோக்கத்துக்காக மாற்றுச்சேவைக்கு அமர்த்தப்பட்ட திரு.எச்.எச்.பஸ்நாயக்க அவர்கள் அவருக்கு உதவினார். 1933 ஆம் ஆண்டு திசெம்பர் 1 ஆந்திகதியன்று திரு. மேர்வின் பொன்சேக்கா அவர்கள் சட்டவரைஞர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். முறையே முதலாவது உதவிச் சட்டவரைஞராகவும் இரண்டாவது உதவிச் சட்டவரைஞராகவும் இருந்த திரு. பீ.சீ. வில்லவராயன் அவர்களும் திரு.எச்.எல். வென்ட் அவர்களும் சட்டவரைஞருக்கு உதவினர். 1943 ஆம் ஆண்டில் திரு. மேர்வின் பொன்சேக்கா அவர்கள் மன்றாடியார் தலைமையதிபதியாக நியமிக்கப்பட்டதுடன், திரு.பீ.சீ. வில்லவராயன் அவர்கள் சட்டவரைஞராக நியமிக்கப்பட்டு அவர் 1949 ஆம் ஆண்டில் ஓய்வுபெறும்வரை அத்தகைய பதவியில் பணியாற்றினார்.

திரு.எச்.என்.ஜீ. பர்ணாந்து அவர்கள் சட்டவரைஞராக அவரை அடுத்துற்று 1955 ஆம் ஆண்டில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியொருவராக நியமிக்கப்படும்வரை அத்தகையவராகத் தொடர்ந்திருந்தார். திரு. ஏ.டபிள்யூ.எச். அபேசுந்தர ஞ.ஊ அவர்கள் அவரை அடுத்துற்றார். 1962 ஆம் ஆண்டில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியொருவராக நியமிக்கப்படும்வரை சட்டவரைஞராகப் பணியாற்றினார். பின்னர் திரு.பேர்ஸி டி சில்வா அவர்கள் சட்டவரைஞராகத் திரு.அபேசுந்தர அவர்களை அடுத்துற்றார். பத்தாண்டுகளுக்கு மேலாகப் பதவி வகித்த பின்னர் திரு. டி. சில்வா அவர்கள் பதவியிலிருக்கும்போதே 1972 ஆம் ஆண்டில் இறந்தார். சட்டவரைஞராகத் திரு.ஓ.எம்.டி அல்விஸ் அவர்கள் திரு.டி சில்வா அவர்களை அடுத்துற்று அவர் 1978 ஆம் ஆண்டுவரை சட்டவரைஞராகப் பணியாற்றினார். அதன்பின்னர் திரு.பீ.என்.கே.றொற்றிகோ அவர்கள் அவரை அடுத்துற்றார். திரு.றொற்றிகோ அவர்கள் 1984 ஆம் ஆண்டுவரை சட்டவரைஞராகப் பணியாற்றினார். அவரும் பதவியிலிருக்கும்போதே இறந்தார். திரு.என்.ஜே.அபேசேக்கர அவர்கள் 1984 ஆம் ஆண்டில் சட்டவரைஞராக நியமிக்கப்பட்டு அவர் 2000 ஆம் ஆண்டு திசெம்பர் மாதத்தில் ஓய்வுபெறும்வரை பதினாறு ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதிக்குப் பதவிவகித்தார். திரு. மல்வத்தகே எட்மன்ட் வோல்ட்டர் பீரிஸ் அவர்கள் அவரை அடுத்துற்று ஒருமாதத்தைக்கொண்ட குறுகிய காலப்பகுதிக்குச் சட்டவரைஞராகப் பதவிவகித்தார். 2001 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் அவர் ஓய்வுபெற்றதன்மேல் திருமதி ரீ.ஆர்.பெரேரா அவர்கள் சட்டவரைஞராக அவரை அடுத்துற்று சட்டவரைஞர் திணைக்களத்தின் எழுபதாண்டுகால வரலாற்றின்போது அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பெண்ணாகவிருந்தார். திருமதி ரீ.ஆர். பெரேரா அவர்கள் 2012 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 12 ஆந்திகதியன்று ஓய்வுபெற்று திருமதி. பீ.ஐ.எஸ். சமரசிங்க அவர்கள் அவரை அடுத்துற்றார். அவர் 2012 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 19 ஆந்திகதிவரை பதவிவகித்தார். சட்டவரைஞராகத் திரு. ஜீ.எஸ்.ஏ. டி சில்வா அவர்கள் அவரை அடுத்துற்றார். 2015 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 15 ஆந்திகதியன்று அவர் ஓய்வுபெற்றதன்மேல், தற்போதைய சட்டவரைஞரான திருமதி டீ.எஸ்.எச். குமாரஜீவ அவர்கள் சட்டவரைஞராக அவரை அடுத்துற்றார்.

சட்டவரைஞர் பதவியை வகித்தோர்

தில்ருக்ஷி சமரவீர PC03 ஜூலை 2021 

பெயர் தொடக்கம் வரை
ஆர்தர் டயர்-பால் 06 ஆகஸ்ட் 1927 18 டிசம்பர் 1930
ஜேம்ஸ் மேர்வின் பொன்சேக்கா K C 21 டிசம்பர் 1933 07 ஜூலை 1942
பொன்னம்பலம் குமாரசுவாமி வில்லவராயன் 07 ஜூலை 1942 07 ஜனவரி 1949
ஹியூ நோர்மன் கிரெகரி பர்ணாந்து 07 ஜனவரி 1949 16 மே 1955
அசோக்க விந்திர ஹேமந்த அபேசுந்தர Q C 06 செப்டெம்பர் 1955 20 ஏப்பிரல் 1962
பேர்சி டி சில்வா 02 ஏப்பிரல் 1962 23 டிசம்பர் 1972
ஒஸ்வல்ட் மேர்வின் டி அல்விஸ் 23 செப்டெம்பர் 1972 03 மார்ச் 1978
புண்யஜித் நந்தகுமார் றொற்றிகோ 03 மார்ச் 1978 12 ஏப்பிரல் 1984
நலின் ஜயந்த அபேசேக்கர P C 05 டிசம்பர் 1984 16 டிசம்பர் 2000
மல்வத்தகே எட்மன்ட் வோல்ட்டர் பீரிஸ் 17 டிசம்பர் 2000 17 ஜனவரி 2001
திரீஸ் ராஜ்குமாரி பெரேரா PC 18th ஜனவரி 2001 12 ஏப்பிரல் 2012
பத்மினி இந்திரா சேனாரத்ன சமரசிங்க PC 13 ஏப்பிரல் 2012 19 டிசம்பர் 2012
கொடவத்தகே சரத் அருணஷாந்த டி சில்வா PC 20 டிசம்பர் 2012 14 செப்டெம்பர் 2015
தீபானி சந்தியா ஹேவா குமாரஜீவ PC 15 செப்டெம்பர் 2015 02 ஜூலை 2021
Scroll To Top